சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BJPagainstTamils, #மார்வாடிகளுக்கு_படியளக்கும்_பாஜக என ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
எனவே, கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகர் முதல்வர் நிதி ஒதுக்க கோரியும் மத்திய அரசு இன்னும் இதை பரிசீலிக்காமல் உள்ளது.
இந்நிலையில், விஜய் மல்லையா தனது விமான நிறுவனம் மீது பெற்ற ரூ.1,943 கோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மீது வாங்கப்பட்ட ரூ.5,492 கோடி கடன் உள்பட மொத்தம் 50 இந்திய செல்வந்தர்களின் வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து இணைய வாசிகள் பலரும் கொதித்துள்ளனர். இதனால் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BJPagainstTamils, #மார்வாடிகளுக்கு_படியளக்கும்_பாஜக என ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.