Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிக்கிருத்திகைக்கு தயாராகும் திருத்தணி! – பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (12:35 IST)
ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஆடி மாதம் கார்த்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்தை திருவிழாவானது மாநிலம் முழுவதும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா அடுத்த மாதம் ஜூலை 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பதால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள், தங்கும் வசதி, கண்காணிப்பு கேமரா, உதவி மையங்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments