Publish Date: Wed, 29 Jun 2022 (12:24 IST)
Updated Date: Wed, 29 Jun 2022 (12:26 IST)
கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜன் சகோதரர் பழனிவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
கனகராஜ் மரணம் விபத்து அல்ல என்றும் அது கொலைதான் என்றும் காவல் நிலையத்தில் கனகராஜின் மனைவி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது