Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை: பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (12:26 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும்  பொதுத் தேர்வு நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 20-ஆம் தேதி கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளன
 
அதேபோல் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 30ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் மற்றும் ஏப்ரல் 8ஆம் தேதி கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 17ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு அதனை கண்டுகொள்ளாமல் பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments