Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண் ஏற்றத்தாழ்வு அதிகமாகும்: பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன்

மத ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண் ஏற்றத்தாழ்வு அதிகமாகும்: பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன்
, புதன், 18 செப்டம்பர் 2019 (20:00 IST)
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன், தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை எதிர்த்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
 
 
ஒரு தும்பியுடைய வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு  கொடுமையான‌ விசயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டி ‌வைப்பது.இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்...
 
 
இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.மாறாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. 
 
 
இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை இந்த சமூகத்துல வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும்.நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
 
 
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன்தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும்  நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்...
 
இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி சந்திப்பில் நடந்தது என்ன? மம்தா பானர்ஜி விளக்கம்