Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பாராத அதிரடி தடை: சரண்டரான டிக் டாக்!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:15 IST)
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே.

டிக் டாக் மீது சமீபகாலமாக பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 12 வயதிற்குட்பட்டோர் டிக் டாக்கை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை.
 
கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் மணிகண்டன் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார். 
 
இந்நிலையில் இது குறித்து டிக் டாக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, பயனர்களை பாதுகாப்பதற்காக ரிப்போர்டிங் அம்சங்கள் உட்பட பல வலுவான அமைப்புகள் டிக் டாக்கில் உள்ளன.
விதிமுறைகளை கடைப்பிடிக்காத வீடியோக்களை சட்ட அமலாக்க அமைப்புகளால் ரிப்போர்ட் செய்வதற்கு இயலும். உள்நாட்டு சட்ட விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். சட்ட அமலாக்க அமைப்புகளுடன் மேலும் திறம்பட செயல்படுவதற்காக இந்தியாவுக்காக தலைமை அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. 

இதனால், டிக் டாக்கில் வெளியாகும் வீடியோக்களில் ஆபாசம் குறையுமா? அல்லது தமிழக அரசு டிக் டாக் தடை செய்யப்படும் என எடுத்த முடிவில் நிலையாக நிற்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்