Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? அரசு எடுக்கும் முடிவு என்ன??

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:21 IST)
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார். 

 
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டக்குழுவினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களில் சிலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறினாலும் போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர். 
 
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழக அரசு இது குறித்து என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments