Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் பலி - அதிர்ச்சி தகவல்

Advertiesment
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் பலி - அதிர்ச்சி தகவல்
, திங்கள், 12 மார்ச் 2018 (08:41 IST)
தேனி அருகேயுள்ள காட்டுத் தீயில் சிக்கி இதுவரை மீட்கப்பட்ட 28 பேர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 5 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்து போனவர்களில் 6 பேர் சென்னையையும், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குரங்கணி மலைப் பகுதியில் பரவும் தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் நுரை கலந்த நீரை இந்திய விமான படையினர் தெளித்து வருவதாகவும், விமான படையினர்களின் இன்னொரு பிரிவினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து தீயில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

களத்தில் இறங்கியது கமாண்டோ படை: உயிருடன் மீட்கப்பட்ட மாணவிகள் விபரம்