Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிடிவி தினகரன் படத்தை கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: தேனியில் பரபரப்பு!

, சனி, 13 ஜனவரி 2018 (12:45 IST)
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வைத்த பேனரில் இருந்த டிடிவி தினகரனின் படத்தை கிழித்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
 
வரும் 14-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது 67-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். தேனி ரோட்டில் உள்ள ஓபிஎஸ் டீ கடைக்கு எதிரேயும் அவர்கள் பேனர் வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் பிறந்த நாள் பேனர்கள் வைத்துள்ளனர்.
 
அந்த பேனர்களில் உள்ள டிடிவி தினகரனின் படத்தை மட்டும் சில நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவாளர்கள் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என சாலை மரியலில் ஈடுபட தயாரானார்கள். இதனை முன்கூட்டியே அறிந்த போலீசார் சாலை மரியலை தடுத்தனர்.
 
இதனையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் வடகரையில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதியளித்த பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். தினகரனின் பேனரை கிழித்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா?