Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களிடம் பணம் பறித்த கும்பலை தாக்கிய மக்கள் தர்ம அடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (22:43 IST)
வயிற்றுப்பிழைப்பிற்காக விபச்சாரம் என்று கூறி இளைஞர்களிடம் பணம் பறித்த கும்பலை தாக்கிய மக்கள் தர்ம அடி
 
 
கரூர் பேருந்து நிலையம் நுழைவு வாயில் எதிர்புறம் உள்ள அண்ணாமலை தெருவில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தின் முன்புறம் ஒரு பெண் மற்றும் 3 இளைஞர்கள் கொண்ட கும்பல் எப்போதும் இரவு பகலாக நின்று கொண்டிருந்து அவ்வப்போது விபச்சாரத்திற்காக உல்லாசத்திற்கு அழைத்து பின், அந்த கும்பல் முதியவர் முதல் இளைஞர் வரை பணம் பிடுங்கி வரும் நிலையில், கரூர் நகர காவல்துறையினர் கண்டும், கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கோயிலின் முன் நடைபெறும் இந்த கூத்து ஒருபுறம் இருக்க, மதுபானக்கடை அந்த பகுதியிலேயே சுமார் 200 மீட்டருக்குள்ளேயே இருப்பதால், அங்கு மதுக்கள் வாங்கி வரும் இளைஞர்கள் இந்த கோயிலின் முன்புறமும், சுவாமி சன்னதியின் இடதுபுறம் தான் மதுக்கள் அருந்துவது வாடிக்கையாம்,இந்நிலையில், அங்கு ஒரு இளைஞரிடம் பணம் பிடுங்கிய நிலையில், அந்த இளைஞரை அந்த விபச்சார கும்பல் தாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த கும்பலுக்கு இதே தான் தொழில் என்றும், ஆலயத்தின் முன்பும், அருகேயும் விபச்சாரமும், மதுபானமும் அருந்துவது தான் தொடர் கதையாகி வரும் நிலையில், பொறுத்திருந்த அப்பகுதி மக்கள் அந்த கும்பலை வலைத்து சுற்றி வளைத்தது. பின்னர் அந்த அடிபட்ட இளைஞரையும் அந்த விபச்சார கும்பலிடம் இருந்து காப்பாற்றி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலையறிந்த town patrol ரோந்து வாகனம் விசாரித்து அந்த பாதிக்கப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கும்பலை களைத்து விசாரணை நடத்தி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments