Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானைவியை தூக்கித்.... தடுப்பூசி போடச் சென்ற முதியவர்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (00:11 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு முதியவர் தடுப்பூசி போடுவதற்காகத் தனது மனைவியைத் தூக்கிக்  கொண்டு சென்றுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது.

கோவை துடியலூரைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மனைவியைத் தூக்கிக் கொண்டு கொரோனா தடுப்பூசி போடுவதற்காகச் சென்றார். இந்தக் காட்சி காண்போரை நெகிழச் செய்தது. இந்த வயதிலும் அன்புகொண்டு ஒற்றுமையாக இருக்கும் தம்பதியை எல்லோரும் வாழ்த்தி, முதியவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments