நாக்பூரில் 40 வயது இளைஞருக்கு 85 முதியவர் ஒருவர் தன் படுக்கையை விட்டுக் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தடுக்கும் வகையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாக்பூரில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, நாக்பூரில் 40 வயது இளைஞருக்கு 85 முதியவர் ஒருவர் தன் படுக்கையை விட்டுக் கொடுத்துள்ளார்.
நாராயண் தபால்கர் 85 வயது முதியவர் ஆவார். இவர் ஆஸ்.எஸ்.எஸ். உறுப்பினராக உள்ளார்.
சமீபத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் நாக்பூர் இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் இறங்கிக் கொண்டிருந்தது. 40 வயது இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த அவரது மனைவி, மருத்துவமனைவில் அவருக்கு இடம் கேட்டுள்ளார்.
இதைப்பார்த்த முதியவர் நாராயன் தபால்கர், அங்கு மருத்துவர்களிடம் நான் வாழ்க்கையை பார்த்துவிட்டேன்…எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. ஆனால் அவர் இளைஞர் அவரது குடும்பம் முக்கியம் என்று தன் படுக்கையை அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அப்படிச் செய்ய வேண்டாம் எனக் கூறினர். ஆனால் தன் குடும்பத்தினரை வரவழைத்து அவர் வீட்டிற்கு டிஸ்ஸார்ஜ் ஆகிச் சென்றார்.
இந்தச் செயலுக்கு நாராயனை பலரும் பாராட்டி வருகின்றனர்.