Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் முடிந்த கையோடு ஜல்லிக்கட்டு காளையை உறவினர்களுக்கு அறிமுகபடுத்திய மணப்பெண்!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (15:29 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்  சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நேற்று  நாகமலைப்புதுக் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
 
இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
 
முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்., தனது உறவினர்களுக்கும் ஜல்லிகட்டு காளையை அறிமுகம் செய்து வைத்தனர் மணமக்கள். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 நிமிடத்தில் 2 பாட்டில் மது குடிக்கும் போட்டி.. பரிதாபமாக பலியான யூட்யூப் பிரபலம்!

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

எங்கள் விட்டிற்கு வந்தது யாரென்றே தெரியவில்லை: அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

2569 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்