பழங்கால 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி- அண்ணாமலை

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (20:56 IST)
கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால தொல்பொருள்களில் 13 பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

கடந்த 9 ஆண்டுகளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

சமீபத்தில் மீட்கப்பட்ட தொல்பொருட்களில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் சிலை மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை ஆகியவை இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments