Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனை: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

Mahendran
புதன், 9 அக்டோபர் 2024 (13:47 IST)
சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது என்றும், சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் என்றும் கைது நடவடிக்கை குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும் சாம்சங் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன் வந்துள்ளதாகவும், சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும், அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும்,  உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments