ஓபிஎஸ்-க்கு பயம் காட்ட துவங்கிய தங்க தமிழ்ச்செல்வன்: திமுக ஃபுல் சப்போர்ட்!!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (08:51 IST)
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்த கையோடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை திமுகவின் முழு ஆதரவோடு கையில் எடுத்துள்ளார். 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்த போது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
 
இதனால், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த இரண்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினருக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்தார். 
 
எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்றே எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments