Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்றே விசாரணை என்பதால் பரபரப்பு

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்றே விசாரணை என்பதால் பரபரப்பு
, புதன், 3 ஜூலை 2019 (07:43 IST)
கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்தபோது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த இரண்டு  ஆண்டுகளாக விசாரணை தள்ளி போய்க்கொண்டே இருந்து வரும் நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்தது
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்றே எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
webdunia
11 எம்.எல்.ஏக்கள் ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஓபிஎஸ் தரப்புக்குத்தான் நஷ்டமே தவிர முக ஸ்டாலின் ஆட்சி கவிழ்ப்பு என்ற கனவு பலிக்க வாய்ப்பில்லை. 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆட்சிக்கு உடனே ஆபத்து இல்லை என்றாலும், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அதில் திமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த வழக்கு முடிவடைந்து அதன்பின்னர் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன் பொதுத்தேர்தலே வந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது