Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை - கோவையில் அதிர்ச்சி

Advertiesment
ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை - கோவையில் அதிர்ச்சி
, செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:29 IST)
ஆசிரியர்கள் கண்டிப்பதால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


 

ஆசிரியர் திட்டி காரணத்தில் அரக்கோணத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
மாணவர்கள் தவறு செய்தால் கண்டிப்பது ஆசிரியரின் கடமைதான். ஆனால், அதை அவமானமாக கருத்தி மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை எடுக்கும் போது, அந்த மரணத்திற்கு ஆசிரியர்களே காரணம் என பெற்றோர்கள்  குற்றம்சாட்டி, அதன் காரணமக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 
 
இதனால், நமக்கென்ன அக்கறை என்ற மனநிலைக்கு ஆசிரியர்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. இது வருங்கால மாணவர் சமுதாயத்தினருக்கு நல்லது அல்ல என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
 
தமிழகத்தில், இந்த மாதம் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு