நீட் தேர்வை விட கொடுமையானது ஆசிரியர் தகுதி தேர்வு.. சபாநாயகர் அப்பாவு..!

Mahendran
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (16:47 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, நீட் தேர்வை விட ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் கொடுமையானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதியை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றம், தனியார் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிர்ணயித்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். கல்விக்கொள்கைகள் மாநில அரசின் கையில் இருந்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், பெரியார், காமராஜர், கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் பாராட்டினார்.
 
பெண்கள் வேலைவாய்ப்பு: நாட்டில் அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு என்றும், கல்விக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments