Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

Advertiesment
எடப்பாடி பழனிசாமி

Siva

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (12:24 IST)
ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு,  நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
 
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறை திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
 
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவ பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
 
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?
 
பொம்மை முதல்வரை போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
உடனடியாக ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருநாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல்: ராகுல் காந்தி கண்டனம்