காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

Mahendran
வெள்ளி, 5 ஜூலை 2024 (18:01 IST)
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. 
 
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை  திரும்பப் பெறும் திட்டம்  அமல்படுத்தப்படும் என  தெரிவித்தார்,.
 
மேலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில்,  தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
அதற்கு பதிலளித்த டாஸ்மாக் தரப்பு சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments