Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 மி.லி மதுப்பாட்டில்கள் விரைவில் அறிமுகம்? கள்ளச்சாராயத்தை தடுக்க தீவிர ஆலோசனை!

Advertiesment
Liquor

Prasanth Karthick

, வியாழன், 4 ஜூலை 2024 (09:00 IST)

சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியான சம்பவத்தை தொடர்ந்து குறைந்த விலை மதுவை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயம் பக்கம் திரும்பாமல் இருக்க குறைவான விலையில் மதுவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக 2001ம் ஆண்டில் இதுபோல கள்ளச்சாராய சாவுகள் நடந்தபோது கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க டாஸ்மாக் கடைகளில் ரூ.15 விலையில் 100 மி.லி மது விற்பனை தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த மலிவு விலை மது விற்பனையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

இந்த 100 மி.லி மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக தற்கான வசதிகளை மது ஆலைகள் ஏற்படுத்த முடியாது என்பதால், 100 மிலி மதுவை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் குறைந்த விலைக்கு விற்க முடியும் என்றும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதன் விலை ரூ.50 முதல் ரூ.80க்குள் அடங்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த உரிய முடிவுகளை அரசு எடுத்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மணி நேரத்தில் ஒரு மாதத்திற்கான மழையில் 60%.. தமிழ்நாடு வெதர்மேன் புள்ளிவிவரம்..!