Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க! – பதிலடி கொடுக்க போய் பல்பு வாங்கிய பாஜக

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (19:06 IST)
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சாதிய பாகுபாடுகள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாக பாஜகவை விமர்சித்த மு.க.ஸ்டாலினை பதிலுக்கு கலாய்த்து ட்வீட் போட்டிருக்கிறார்கள் தமிழக பாஜக.

வினாத்தாள் ஒன்றில் சாதிய பாகுப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், அது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள்தான் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க அந்த வினாத்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளியுடையது கிடையாது என்றும், சிலர் சாதி, மத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஸ்டாலினின் ட்வீட்டை மேற்கோள் காட்டி “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கலைஞரின் தமையனே உம்மை புரிந்துகொண்டர் உண்மை தெரிந்து கொண்டர் இந்தப் தமிழக மக்கள் தானே! எந்த பள்ளியில் இது? சன் ஷைன் சிபிஎஸ்சி பள்ளியிலா?” என்று தமிழக பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த பதிவுக்கு கீழே பலர் ஆதரவாகவும், எதிராகவும் கமெண்டுகளை இட்டு வருகின்றனர். பாஜக எழுதியுள்ள பதிவில் “தமையன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமையன் என்றால் சகோதரன் என்று பொருள். தனயன் என்றால்தான் மகன். எனவே சொற்பிழை இல்லாமல் கிண்டல் செய்யவும் என சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments