Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் - தமிழிசை

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (12:25 IST)
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.
 
மத்திய நீர்வளத்துறை செயலாளர் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழக சட்டசபையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராது என்பது தெளிவாக தெரிந்தது.
 
இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை, உச்ச  நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments