Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவுக்கு எதிரான கருத்து: அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி நீக்கம்!

Advertiesment
பாஜகவுக்கு எதிரான கருத்து: அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி நீக்கம்!
, வெள்ளி, 16 மார்ச் 2018 (19:56 IST)
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் பொம்மையாகவும், பினாமியாகவும் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை தேவைப்பட்டால் ஆதரிப்போம் என்று தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளது.
 
இதனையடுத்து அதிமுகவும் தேவைப்பட்டால் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கூறியிருந்தார். தற்போது இவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 
 
அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்பியுமான கேசி பழனிச்சாமி பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அதிமுக மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
மேலும், கட்சி உறுப்பினர்கள் யாரும் கேசி பழனிசாமியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்செல், ஏர்டெல்லை அடுத்து வோடோபோனுக்கும் சிக்கல்?