Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவை மோடியிடம் அடகு வைப்பவர்களை கண்டு எனக்கு அச்சமில்லை: போட்டுதாக்கும் கேசி முனுசாமி...

அதிமுகவை மோடியிடம் அடகு வைப்பவர்களை கண்டு எனக்கு அச்சமில்லை: போட்டுதாக்கும் கேசி முனுசாமி...
, வெள்ளி, 16 மார்ச் 2018 (20:48 IST)
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான கொண்டுவரப்பட்டதற்கு அதிமுகவும் தேவைப்பட்டால் ஆதரிக்கும் என்று முன்னாள் எம்பி  கே.சி. பழனிசாமி கூறியிருந்தார். தற்போது இவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 
 
இதற்கு கேசி முனுசாமி பின்வருமாறு பதிலடி கொடுத்துள்ளார், கட்சியில் இருந்து என்னை நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும். ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு தான் அச்சப்படமாட்டேன்.  
 
ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டேன், ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சியில் என்னை இருந்து நீக்குவது செல்லாது.
 
எனது கருத்தில் எந்த இடத்தில் கட்சியின் கொள்கையை மீறினேன் என ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம்  முன்பாக கட்சிக்கு வந்தவன் நான். மோடியிடம் அதிமுகவை ஓபிஎஸும் ஈபிஎஸும் அடகு வைக்கப் பார்க்கிறார்கள் என்று போட்டு தாக்கியுள்ளார். 

மேலும், இவர்கள் இணைந்து மார்ச் 30 ஆம் தேதிக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு எதிரான கருத்து: அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி நீக்கம்!