Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ. கட் ஆஃப் சர்ச்சை – புது விளக்கமளித்த தமிழிசை !

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (14:16 IST)
எஸ்பிஐ வங்கித் தேர்வுகளுக்கான கட் ஆஃப் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில் அதற்குப் பதிலளித்துள்ளார் தமிழிசை.

கடந்த ஜூன் 22, 23 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் எஸ்.சி, ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினர் ஆகிய 3 தரப்பினருக்கும் 61.25 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கு 53.75 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 28.5 மதிப்பெண் மட்டுமே கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரின் கட் ஆப் மார்க் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை விட மிக குறைவாக உள்ளது. மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளாதால் இவ்வளவு குறைவாக கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. 

இதுசம்மந்தமாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் பெருவாரியாக எழுந்துள்ளன. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது விளக்கமளித்த தமிழிசை ‘இடஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு வரும் முதல் தேர்வு இது. இதனால் சான்றிதழ்களை அனைவரும் முறையாக சமர்ப்பிக்க முடியாது. இதனால் போட்டி குறைவாக இருந்த காரணத்தால் கட் ஆப் குறைவாக அளிக்கப்பட்டுள்ளது. போட்டி அதிகமாக அதிகமாக கட் ஆஃப் உயர்த்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்.! தமிழக அரசு அறிவிப்பு

ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன் பிரச்சனை.. அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்..!

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments