Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கை மருத்துவத்தில் புற்றுநோய்க்கு மருந்தாகும் நித்ய கல்யாணி!!

இயற்கை மருத்துவத்தில் புற்றுநோய்க்கு மருந்தாகும் நித்ய கல்யாணி!!
எல்லா பருவக் காலங்களிலும் இவை பூத்து குலுங்குவதால் நித்ய கல்யாணி என்ற பெயர் பெற்றுள்ளது. வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
விஷ ஜுரம் மற்றும் நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. மேலும் இவை புற்று நோயை கூட கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். இதற்கு நித்தியகல்யாணியின் இலைகள், தண்டு, வேர் என அனைத்தையும் நீரிலிட்டு நன்கு கொதிக்க பாதியாக சுண்டி வந்தவுடன் அதனுடன் தேன் சேர்த்து இருபது மில்லி லிட்டர்  வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.
webdunia
சமுலம் தயாரிக்கும் முறை:
 
நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும்  இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி  வைத்துக்கொள்ள வேண்டும். 
webdunia
* பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து  விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.
 
* முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது இந்த நித்திய கல்யாணி.
 
* ஆஸ்துமாவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து இருபது மில்லி  லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.
webdunia
* இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரக்கும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும். 
 
* இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் ஏற்படும் அதிகபடியான பித்தத்தை குறைப்பதற்கான குறிப்புகள்..!!