டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Mahendran
வியாழன், 11 செப்டம்பர் 2025 (17:43 IST)
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
ஆசிரியர்களின் பணித் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு வந்தன.
 
இந்நிலையில், ஆசிரியர் சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை, ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு ஆதரவான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments