Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்களை விட மாணவிகள் 7.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி!

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்களை விட மாணவிகள் 7.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி!
, வெள்ளி, 19 மே 2023 (14:30 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கு வெளியானதை தொடர்ந்து. சற்றுமுன் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது.  தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.10 ஆயிரம் ரூபாயா? – அசர வைக்கும் Realme Narzo N53!