Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.10 ஆயிரம் ரூபாயா? – அசர வைக்கும் Realme Narzo N53!

Realme Narzo N53
, வெள்ளி, 19 மே 2023 (11:10 IST)
ரியல்மி நிறுவனத்தின் புதிய வரவான Realme Narzo N53 குறைவான விலையில், பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வாறாக தற்போது ரியல்மி வெளியிட்டுள்ள Realme Narzo N53 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பலரை கவர்ந்துள்ளது.

Realme Narzo N53 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.74 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் டி612 சிப்செட்,
ஆக்டாகோர் ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 13, ரியல்மி யூஐ டி எடிசன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்
4 ஜிபி / 6 ஜிபி ரேம் + 6 ஜிபி வரை நீடித்துக் கொள்ளும் விர்ச்சுவல் ரேம்
64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி + 2 TB வரை எக்பேண்டபிள் மெமரி ஸ்லாட்
50 எம்.பி ப்ரைமரி AI கேமரா, 8 எம்பி செல்பி கேமரா
5000 mAh பேட்டரி, 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்

இந்த Realme Narzo N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் கோல்ட் மற்றும் ஃபெதர் ப்ளாக் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.

Realme Narzo N53 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.8,999-க்கும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.10,999-க்கும் விற்பனையாகிறது. குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட்/டெபிட் கார்டுகளுக்கு சலுகை உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடுதேடி வரும் கோயில் பிரசாதம்.. உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம்: அமைச்சர் சேகர்பாபு