பத்து லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட அசுத்தமான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நடத்தும் ஸ்வச் சுர்வேக்சன் என்ற ஆய்வில் நாட்டின் தூய்மையான நகரம் எது அசுத்தமான நகரம் எதுவென பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அசுத்தமான நகரத்தின் பட்டியலில் தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாட்னாவும், அடுத்து கிழக்கு டெல்லி, மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளது. அசுத்த நகரங்களில் தமிழகத்தின் சென்னையை தவிர்த்து மதுரை 6-ம் இடத்திலும், கோவை நகரம் 8-வது இடத்திலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது குறித்து எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தவறுதலாக, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தூய்மை நகரங்கள் தர வரிசை பட்டியலில் கோவை மாநகராட்சி தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது மிகவும் பெருமையளிக்கிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.
கோவையை குப்பையில்லா நகரமாக்க பல்வேறு முயற்சிகளுடன் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் கோவை மாநகராட்சி, இதே உத்வேகத்துடன் செயல்பட்டு அடுத்தாண்டு தேசிய அளவில் முதலிடம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என் பதிவிட்டுள்ளார்.