Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக கோட்டை, ஆளுநர் மாளிகையையும் இழுத்து மூடுவோம்: பிரபல இயக்குனர்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (15:40 IST)
காவிரி பிரச்சனைக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரையுலகினர்களை தனியாக பிரித்து பார்த்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கும். அதுதான் அவர்கள் சினிமாவில் பணி செய்தே பல வருடங்கள் ஆகியிருக்கும் என்பது. பல வருடங்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த பாரதிராஜா, அமீர், இயக்குனர் கவுதமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர்கள் குரல் தான் தற்போது காவிரிக்காக ஓங்கி வந்து கொண்டு இருக்கின்றது.
 
இவர்களும் திரையுலகில் பிசியாக இருந்தால் இந்த குரல் எழுந்திருக்காது. சினிமாவில் வேலை இல்லாததால் பொழுது போக்கிற்காக இவர்கள் போராட்டம் நடத்துவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில் தற்போது இயக்குனர் கெளதமன் காவிரிக்காக கோட்டை, ஆளுநர் மாளிகையை இழுத்து மூடுவோம் என தெரிவித்துள்ளார். நடைமுறையில் முடியாத ஒன்று என்று தெரிந்தும் வீராவேசமாக அவர் பேசியதை கேட்டும் ஒருசில கும்பல்கள் கைதட்டி இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கெளதமன், 'கத்திப்பாரா பாலத்தை மூடியதுபோல் செயல்பட மாட்டோம் என நினைக்கவேண்டாம். மண்ணில் மானங்கெட்டு ஒருபோதும் சாகமாட்டோம்; போராடியே உயிர்நீப்போம். தமிழகத்தை காக்க யுத்தத்தை சந்திக்க தயாராக இருக்கிறோம். காவிரிக்காக கோட்டை, ஆளுநர் மாளிகையையும் இழுத்து மூடுவோம்' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.25 லட்சம்.. காங்கிரஸ் வாக்குறுதி..!

கேஸே நாங்கதான்.. திருட்டு வழக்கில் பீஸ் கொடுக்க வக்கீலிடமே திருடிய திருடன்!

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்.. ஆனால்..? - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments