மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மத்திய அரசை எதிர்த்தும், மேலாணமை வாரியம் அமைக்க கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்கத்தில் இவ்வாறு பிரச்சனை நடந்து வரும் வேலையில் ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தேசிய கவனம் இந்த விவகாரத்தில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த ஐபிஎல் போட்டி நடக்காமல் இருந்தால் நல்லதுதான் ஆனால் அப்படி இல்லை என்றால் சிஎஸ்கே வீரர்கல் கருப்பு பேட்ஜ் அறிந்து விளையாட பிசிசிஐ அல்லது ஐபிஎல் நிர்வாகிகள் இது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிம்பு வலியுறுத்தினார். இவ்வாரு இருக்கையில், வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியது.
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், வீண் வசந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.