Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த.வெ.க மாநாடு: திருமாவுக்கு ரூட் போட்ட விஜய்..! பதிலுக்கு பா.ரஞ்சித் குடுத்த ப்ளூ சிக்னல்!

Advertiesment
vijay thiruma

Prasanth Karthick

, திங்கள், 28 அக்டோபர் 2024 (08:52 IST)

நேற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

 

 

நேற்றைய விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், மாநாட்டில் பேசிய விஜய், கட்சி பெயர்களை குறிப்பிடாமலே தேசிய பாசிசம், திராவிட மாடல் என சுட்டிக்காட்டி பல விமர்சனங்களை வைத்தார். 

 

அவர் பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஆதரிக்க வேண்டும் என பேசினார். அப்போது தங்கள் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துப்போகும் பிற கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் கூட்டணிக்கும் தயார் எனக் கூறிய விஜய், கூட்டணியில் வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார்.

 

சமீபமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் நடிகர் விஜய், திருமாவளவனுக்குதான் மறைமுக அழைப்பு விடுக்கிறார் எனப் பேசிக் கொள்ளப்பட்டது.

 

webdunia
 

இந்நிலையில் விஜய்யின் மாநாடு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

 

பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை தொடர்ந்து விசிக - பா.ரஞ்சித் இடையே முரண்பாடு இருந்து வந்தது. இதனால் பா.ரஞ்சித் மற்றொரு தலித் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பா.ரஞ்சித் ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் கருத்தை வரவேற்றிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி பட்டாசு விற்பனை.. சென்னையில் விறுவிறுப்பு.. சிவகாசியில் மந்தம்..!