Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் திருமாவளவன் முதல்வர் ஆகலாம்: கிருஷ்ணசாமி

Advertiesment
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் திருமாவளவன் முதல்வர் ஆகலாம்: கிருஷ்ணசாமி

Mahendran

, வியாழன், 24 அக்டோபர் 2024 (15:17 IST)
திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்றால் முதலில் அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் முதல்வராவதற்கு தகுதி உள்ளது என்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக தான் அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகிறது என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வராக வேண்டும் என திருமாவளவன் கூறுவது பொருத்தம் இல்லாதது என்றும், தவறான இடத்தில் இருந்து கனவு காண்பது தவறு என்றும், அது பகல் கனவாகவே போய்விடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்றால் முதலில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியே வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் திருமாவளவன் முதல்வராவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவரும் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 16 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்