Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிரவு அன்றே சந்தேகம்,… புதுப்பெண் விபரீத முடிவு

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:16 IST)
வேலூர் மாவட்டத்தில் முதலிரவு அன்றே புதுப்பெண் மீது சந்தேகம் கொண்டு அவரைக் கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள பிரம்மபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவருக்கும் ரெட்டிப் பாளையம் பகுதியில் வசித்து வந்த சந்திரலேகா என்பவருக்கும் கடந்த மாதம் ஆகஸ்ட்23 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, ஒருவாரத்திலேயே சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் குடும்பத்தார் போலீஸுல் புகார் அளித்தனர். இதில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

மேலும் சந்திரலேகா தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், முதலிரவிலேயே டார்ச்சர் செய்துள்ளதாக தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments