Publish Date: Mon, 03 Aug 2020 (07:58 IST)
Updated Date: Mon, 03 Aug 2020 (08:00 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்ய தொடங்கி ஒருசில இடங்களில் விடியவிடிய மழை பெயது.
குறிப்பாக தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கிண்டி, திருவான்மியூர், மாம்பலம், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
இன்றும் சென்னையின் சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்று வெளியே செல்லும் மக்கள் மழையை எதிர்கொள்ள ஆயத்தத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார். மேலும் அரபிக் கடல், மகாராஷ்டிரா கடல், மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது