Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை? சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் கருத்தால் பரபரப்பு..!

Advertiesment
sterlite

Siva

, வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:05 IST)
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த ஆலை தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க ஆலை நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றும் ஆனால் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆலையை திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை அடுத்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை தேசிய சொத்து என்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இந்த கருத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராடி வரும் விவசாயிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம்: காவல்துறையின் அதிரடி அறிவிப்பு..!