Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்: உச்சநீதிமன்றம் செல்வேன் என சுப்பிரமணிய சாமி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் முடிவு தவறானது என்றும் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது திமுகவின் நீண்ட கால கனவு என்பதும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பதவியை சமீபத்தில் நியமனம் செய்தார் அவர்கள் அனைவரும் தற்போது பொறுப்பு ஏற்று அர்ச்சனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது என்றும் ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி முதல்கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன் என்றும் தேவையான உச்சநீதிமன்றம் வரை செல்வேன் என்று சுப்பிரமணியசாமி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திக சொன்னதை கேட்டு தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

அடுத்த கட்டுரையில்
Show comments