Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள்-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (12:33 IST)
ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துகுடி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை குறைப்பு என்ற அறிவிப்புக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென அவர்கள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்து அதனை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதால் அந்த பகுதியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தலைமைச்செயலகம் நோக்கி செல்ல முயற்சிக்கும் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

உயர்கல்வி படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் ரூ.85 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகையை அரசு குறைத்துள்ளதால் இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments