Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் பெற்ற தாயை கொன்ற மகன்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (12:15 IST)
சென்னையில் தனக்கென வாங்கி வைத்திருந்த மதுவை தாய் குடித்ததால், பெற்ற மகனே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி(54). இவரது மகன் நீலகண்டன்(25). தாய் மகன் இருவருமே மதுக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று கலாவதி,  நீலகண்டன் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளார்.
 
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நீலகண்டன், தான் வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்க முற்பட்டார். அப்போது தான் வாங்கி வைத்திருந்த மது காணாததால் வீடு முழுவதுமாக மதுவை தேடியுள்ளார். பிறகு கலாவதி தனது மதுவை குடித்திருப்பதை அறிந்து ஆத்திரத்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியை கீழே தள்ளியுள்ளார். சுவரின் மீது கலாவதியின் தலை மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கலாவதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது பிரச்சனையால் பெற்ற மகனே தாயை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments