Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் கைது

Advertiesment
இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற  சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் கைது
, ஞாயிறு, 25 மார்ச் 2018 (16:30 IST)
இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்மவிபூஷன் விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார். அவரது புகழ் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களிடையே ஓங்கியிருக்கும் நிலையில் இன்று அவரது வீட்டை  சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் சிலர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

கிறிஸ்தவ மதத்தை பற்றி இளையராஜா அவதூறாக பேசியதாகப் புகார் தெரிவித்த அந்த கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தி.நகரில் இளையராஜா வீட்டை
முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக்கட்சியினர்களை கைது செய்தனர். இதனால் இளையராஜா வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிபோதையில் விமானத்தை இயக்க தயாரான பைலட் கைது