குறி சொல்லும் பேரில் திருட்டு : இளைஞரை வளைத்து பிடித்த போலீஸ்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (20:24 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தக தோட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மல்லிகா என்ற பெண் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவ்வழியே சென்ற தினேஷ் மல்லிகாவிடம் குறி  சொல்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே தினேஷ் மல்லிகாவிடம் பலமுறை குறி சொல்லியுள்ளதால் அதே நம்பிக்கையில் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 
 
ஆனால் மல்லிகா சிறிது வெளியே சென்ற போது, அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் தினேஷ். அப்போது வீட்டில் இருந்த பணம் ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
 
இந்நிலையில் மல்லிகா அங்குள்ள காவல் நிலையத்தில், தினேஷ் மீது புகார் அளித்தார்.  இவ்வழக்கை பதிவு செய்த  போலீஸார் தினேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினேஷ் தன் குற்றத்தை ஒப்புகொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். பின் தினேஷை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments