Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஓட்டல்களில் திடீரென குவிந்த கூட்டம்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (20:18 IST)
சென்னை உள்பட பெருநகரங்களில் தற்போது வீடுதேடி உணவு சப்ளை செய்யும் ஸ்வக்கி நிறுவனத்தை தான் பெரும்பாலானோர் நம்பியுள்ளனர்.  கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் வீட்டில் பெரும்பாலும் டின்னர் ஸ்வக்கியை நம்பித்தான் உள்ளது. ஆன்லைன் செயலி மூலம் தேவையான உணவை ஆர்டர் செய்தால் அதிகபட்சம் அரை மணி நேரத்தில் வீடு தேடி உணவு வந்துவிடும்

இந்த நிலையில் இன்று முதல் திடீரென ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதுவரை 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.36 ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு ரூபாய் குறைத்து ரூ.35ஆக குறைக்கப்பட்டதாகவும், மேலும் 4 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவுக்கும் ஊதியம் கணிசமாக குறைக்கப்பட்டதாகவும் கூறி ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஸ்வக்கி செயலியில் செய்யப்பட்ட ஆர்டர்கள் சப்ளை ஆகவில்லை என்பதால் சென்னைவாசிகள் இன்று திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேறு வழியின்றி ஓட்டல்களில் பொதுமக்கள் நேரடியாக செல்வதால் பெரிய ஓட்டல்களில் இன்று வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments