Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து பலாத்காரம் செய்தேன்!!! கோவை காமுகன் பகீர்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:09 IST)
சிறுமியிடம் இதற்கு முன்னரே பல முறை அத்துமீறியுள்ளதாக கோவையில் சிக்கிய காமுகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது. இது தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
குற்றவாளியை பிடிக்க போலீஸார் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தியதில் சந்தோஷ்குமார் என்ற அயோக்கியன் சிக்கினான். இந்த கேடுகெட்டவன் தான் அந்த பிஞ்சுக்குழந்தையை நாசமாக்கியது.
 
விசாரனையில் அவன் அளித்த வாக்குமூலம், போலீஸாரையே அதிர வைத்துள்ளது. எனக்கு திருமணமாகிவிட்டது. கருத்துவேறுபாட்டின் காரணமான என் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகே தான் என் பாட்டி வீடும் உள்ளது. பாட்டியை பார்க்கும் வரும்போதெல்லாம் சிறுமியிடம் அத்துமீறுவேன்.
 
இப்பொழுதும் அதேபோல் சிறுமியிடம் அத்துமீறினேன். சிறுமி கத்தியதால் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என கூறியுள்ளான். போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்