Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய கமல் !முக்கிய வேண்டுகோள்

கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய கமல் !முக்கிய வேண்டுகோள்
, சனி, 30 மார்ச் 2019 (10:52 IST)
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆறுதல் கூறினார்.
 

 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
 
குழந்தையின் பெற்றோரை பார்த்து வந்திருக்கிறேன். அவங்களுக்கு நியாயம் கிடைத்தாக அவர்கள்  நம்பவில்லை. காவல்துறை கடமையை செய்யும் என நம்புகிறேன். ஐ.ஜி யை பார்க்க நேரம் கேட்டுருந்தேன், ஆனால் அனுமதிக்கவில்லை. தேர்தல் வேலையில் ஐ.ஜி.இருப்பதால் , நான்  சந்திக்க அனுமதி கொடுக்கா வில்லை
நானும் தேர்தல் வேலையில் தான் இருக்கிறேன். இது மாதிரி சம்பவம் நடக கூடாதினு கோபம் இருக்கு.
வீட்டில் இருபது அடி தள்ளி விளையாட முடியாத சூழலா? தேர்தல் வசதிக்காக வரவில்லை. இனி மேல் நடக்காமல் இருக்க , நாம்  எல்லாம் நம்ம விட்டு குழந்தையாக பார்க்க வேண்டும்
இது தேர்தலுக்காக பேச்சு இலை 
இதை பற்றி அதிகம் பேர் பேச வேண்டும் என்று தான் நான் இங்கு வந்துள்ளேன். சிறிய ஊரில், இது எப்படி நடந்தது என தெரிய வில்லை
 
கண்டிப்பா சுலபமாக கண்டுபிடித்து இருக்கலாம் . துரிதப் படுத்த வேண்டிய  கடமை உள்ளது   தேர்தலை விட , இந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தான் முக்கியம் என நினைக்கிறேன் 
தமிழகத்தில் குழந்தைகள் மீதான   குற்றம் அதிகம்  நடப்பதாக   கணக்கு காட்டுகிறது.அரசு மெத்தனமாக இருக்கிறது. இது ஊழல் அரசு என்பதில்  சந்தேகம்  இல்லை" இவ்வாறு. கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உசிலம்பட்டி பெண் போலீஸ் தற்கொலையில் திருப்பம் : பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர்