Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ் பச்சையாக புளுகுகிறார்; பட்டா பத்திரத்தோடு பக்காவாக வந்த ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:29 IST)
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததற்கு, இல்லை என்று ஆதாரத்தோடு களம் இறங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்த ஸ்டாலின் ‘பஞ்சமி’ நிலங்கள் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது குறித்து பேசியதற்காக படக்குழுவினரை பாராட்டியிருந்தார். அந்த பாராட்டு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். அதை மேற்கோள் காட்டி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக ஆட்சியில்தான் பஞ்சமி நிலங்கள் அதிகம் பறிக்கப்பட்டதாகவும், தற்போதைய முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என்றும் குற்றம் சாட்டினார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று ட்விட்டரில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின் “மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!” என்று தெரிவித்து அதன் பட்டா சான்றிதழின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments