Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

BSNL- க்கு ரொம்ப காய்ச்சல் !... இப்டி இருந்தா எப்படி முன்னேறும் ? டாக்டர் ராமதாஸ் ’டுவீட் ’

Advertiesment
BSNL- க்கு ரொம்ப காய்ச்சல் !... இப்டி இருந்தா எப்படி முன்னேறும் ?  டாக்டர் ராமதாஸ் ’டுவீட் ’
, செவ்வாய், 15 அக்டோபர் 2019 (16:21 IST)
நம் நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம். ஆரம்பித்த புதிதில் செழிப்பாக இருந்த இந்த அமைப்பு, நாட்டில் தனியார்துறைக்கு தொலைத் தொடர்புத்துறை சென்றதுக்கு பின்னர் போட்டியைச் சமாளிக்க முடியாமல்  திணறிவருகிறது.
தற்போது, இதன் மொத்த வருமானத்தில் 60% மேல் இந்நிறுனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கே செலவிடப்படுவதகாவும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப உள்ளதாகவும்,தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவையை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணமாகவே உள்ளது.
 
இப்படியிருக்க தமிழ்நாட்டில் மிகமுக்கிய அரசியல் தலைவரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவையை பற்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
 
அவர் தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது :
 
’காஷ்மீரில் தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கிவிட்டனவாம். அம்மக்களுக்காகவது சில மாதங்களில் தொலைபேசி சேவை கிடைத்துவிடுகிறது. தைலாபுரம்  தோட்டத்தில் தரைவழி இணைப்பு எப்போது வேலை செய்யும், எப்போது செயலிழக்கும்? என்பது யாருக்கும் தெரியவில்லை.
 
எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு இரு BSNL தரைவழி இணைப்புகள் உள்ளன. லேசாக மழை தூறினாலும் அவற்றுக்கு காய்ச்சல் வந்து செயலிழந்து விடும். எத்தனைமுறை சரி செய்தாலும் நிரந்தமாக குணமாகவில்லை. எத்தனையோ தொழில்நுட்பம் வந்தாலும் இவ்வளவு மோசமாக சேவை செய்தால் எப்படி முன்னேறும் ?
 
சேவை மிகவும் மோசமாக இருப்பதால் தங்கள் செல்பேசி இணைப்பை வேறு நிறுவன சேவைக்கு மாற்ற அனுமதிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை: செய்தி-என் வீட்டு தரைவழி இணைப்பு தான் பிரச்சினை என்றால் நாடு முழுவதும் இதே நிலை தானா...எப்போது திருந்தும்’ என கடுமையாக விமர்சித்து அவர்  தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகனுடன் தொடர்பில் இருந்த நடிகை யார்?