Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா... 600 சிறப்பு பேருந்துகள் ரெடி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (11:03 IST)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு மாதந்தோறும்பௌர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதிலிருந்தும் இயக்கப்படும். மேலும் முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

இந்த முறை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை (அக்டோபர் 28) ஐப்பாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ரயில்வே துறையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது போக்குவரத்து கழகமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து சுமார் 300 பேருந்துகளும், தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளிலிருந்து சுமார் 300 பேருந்துகளும் தினசரி பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments